News April 20, 2024

கடலூர்:கடந்த தேர்தலை விட 1.36% வாக்குகள் குறைவு

image

கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 72.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இது கடந்த 2019-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவாகி இருந்த வாக்குகளை விட 1.36 சதவீத வாக்குகள் குறைவாகும். அதாவது கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 73.64 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவானது.

Similar News

News August 17, 2025

கடலூர்: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News August 17, 2025

கடலூர் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் வரும் ஆக.19-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் பரங்கிப்பேட்டை, பி.முட்லூர், பிச்சாவரம், ஸ்ரீ முஷ்ணம், ஊ.மங்களம், மேலப்பாலையூர், காட்டுமன்னார்கோவில், பழஞ்சநல்லுர், சிறுவரப்பூர், வெள்ளக்கரை, ஓதியடிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2025

கடலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் இன்று (ஆக.16) இரவு கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!