News May 6, 2024
கடலூர்:கடந்த ஆண்டைவிட முன்னேற்றம்

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து 28,518 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 26911 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் கடலூர் மாவட்டம் 94.36 சதவீத தேர்ச்சி பெற்று மாநில அளவில் 22-வது இடத்தை பிடித்தது. இது கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் 92.04 சதவீத தேர்ச்சி பெற்று 27-வது இடத்தை பிடித்தது.
Similar News
News November 7, 2025
கடலூர்: மனைவி கண்டித்ததால் தற்கொலை

காட்டுமன்னார்கோயில் அடுத்த குருங்குடியை சேர்ந்தவர் தொழிலாளி அன்பழகன் (46). இவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததை, அவரது மனைவி வனிதா கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் விஷத்தை குடித்து விட்டார். பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News November 7, 2025
கடலூர்: லாரி மோதி 2 பேர் பரிதாப பலி

நெய்–வேலி அருகே வடக்குத்து பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஸ்டான்லி (32), புவனகிரி அருகே மேலவன்னியூரை சேர்ந்தவர் விஜயகுமார் (29) ஆகியோர் நேற்று வேலைக்கு செல்வதற்காக கடலூர் ஜவான்பவன் புறவழிச்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரி டூவீலர் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட விஜயகுமார் (29) சம்பவ இடத்திலும், ஆரோக்கிய ஸ்டான்லி மருத்துவமனையிலும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
News November 7, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.6) இரவு 10 மணி முதல் இன்று (நவ.7) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


