News April 5, 2024

கடலூருக்கு இன்று முதல்வர் வருகை

image

விழுப்புரத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று (ஏப்ரல்.5)மாலை முதல்வர் ஸ்டாலின் விழுப்புரத்திற்கு வருகிறார். கூட்டம் முடிந்ததும் அவர், காரில் கடலூர் வந்து சி.கே.பள்ளியில் இரவில் தங்குகிறார். தொடர்ந்து நாளை(ஏப்ரல்.6) கடலூர் சில்வர் பீச் மற்றும் அண்ணா விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

Similar News

News November 6, 2025

அண்ணாமலை பல்கலையில் புதிய ஒப்பந்தம்

image

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், ஊடக ஆய்வு தொடர்பான இரண்டு மற்றும் மூன்று ஆண்டுகள் பட்டய படிப்புகளுக்கான தனியார், நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்வு நேற்று (நவ.5) பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் குழு உறுப்பினர் அறிவுடை நம்பி தலைமையில் நடைபெற்றது. இதில் மையத்தின் தலைவர்கள் ஒன்றிணைந்து மூன்று மாதத்திற்கான ஒப்பந்தங்களைக் கையொப்பமிட்டனர்.

News November 6, 2025

கடலூர்: வயலில் இறந்து கிடந்த முதியவர்!

image

விருத்தாசலத்தை அடுத்து கிளிமங்கலம் மயானத்துக்கு செல்லும் வழியில் முதியவர் ஒருவர் நேற்று (நவ.05) இறந்து கிடந்தார். இது குறித்த தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் முருகன் குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (65) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 6, 2025

கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.5) இரவு 10 மணி முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!