News December 31, 2025
கடலூரில் 2,86,662 விவசாயிகள் பயன்

கடலூர் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 2,86,662 விவசாயிகள் பல்வேறு வேளாண் திட்டங்களின் மூலம் பயனடைந்துள்ளனர். இதில் குறிப்பாக குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம், குறுவை பருவத்தில் மாற்று பயிர் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு, வேளாண் தொழில் முனைவோர் ஆக்கத் திட்டம், நீர்வள நிலவள திட்டத்தில் பயனடைந்துள்ளதாக மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
கடலூர்: தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

கடலுார் முதுநகர் அடுத்த குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ரத்னாம்பாள் (80). கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்த இவர், விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது, அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில் படுகாயமடைந்தார். இதில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 2, 2026
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று(ஜன.1) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.2) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.