News April 16, 2024
கடலூரில் வரும் 22ம் தேதி முதல்

கடலூர் ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 25 % இட ஒதுக்கீட்டில் எல்கேஜி சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பள்ளி கல்வித்துறையின் இணைய தளத்தில் வரும் 22ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 19, 2026
கடலூர்: கடலில் விழுந்து மீனவர் பலி

கடலூர் சலங்கைகார தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவருக்கு சொந்தமான பைபர் படகில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த கோபிகரண், நவநீதன், ஆண்டனி, கௌரிதரன் ஆகிய 4 பேர் நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கோபிகரண் தவறி கடலில் விழுந்து உள்ளார். இந்நிலையில், படகில் இருந்தவர்கள் அவரை உயிரிழந்த நிலையில் மீட்டுள்ளனர். அவரது உடல் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
News February 19, 2026
கடலூர்: பிரபல ரவுடி குண்டாஸில் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலி மாற்றுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ்கர்(25). பிரபல ரவுடியான இவர் மீது நெய்வேலி, ஊ.மங்கலம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, முத்தாண்டிக்குப்பம் ஆகிய காவல் நிலையங்களில் 10 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது குற்ற செயல்களை தடுக்கும் வகையில் எஸ்பி. பரிந்துரைப்படி ஆட்சியர் உத்தரவுபடி நேற்று சுபாஷ்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News February 18, 2026
கடலூர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <


