News June 8, 2024

கடலூரில் மத்திய சிறை கைதி சாவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூரை சேர்ந்த ஆறுமுகம்(42) என்பவர் கடந்த 28.4.2022 அன்று நடந்த கொலை வழக்கில் கைதாகி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு கடந்த 4-ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதால் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் இன்று இறந்தார். இதுகுறித்து முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 9, 2025

தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை

image

குறிஞ்சிப்பாடி வடக்கு மேலூரை சேர்ந்தவர் அருள் குமார்(24). இவரது தந்தை இரண்டு மாதத்திற்கு முன்பு இறந்ததால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் அருள்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் நெய்வேலி போலீசார் அருள்குமார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 9, 2025

கடலூர்: உங்கள் PAN கார்டு ரத்து செய்யப்படலாம்

image

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க<> eportal.incometax.gov.in<<>> என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

கடலூர்: அரசு வேலை – தேர்வு இல்லை!

image

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 37 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே (நவ.9) கடைசி நாளாகும்.
1. கல்வி தகுதி: 10-ம் வகுப்பு
2. சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை
3. தேர்வு முறை: நேர்காணல் மட்டும்
4. வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
6. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!