News August 13, 2024
கடலூரில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

நாடு முழுவதும் நாளை மறுநாள் (ஆக.15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மைதானத்தில் போலீசார், என்.சி.சி., ஜே.ஆர்.சி. மாணவர்கள், ஊர்க்காவல் படை, தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகை நடத்தினர். மேலும் வெடிகுண்டு நிபுணர்களும் மைதானம் முழுவதும் சோதனை நடத்தினர்.
Similar News
News April 7, 2026
கடலூர் மாவட்டத்தில் 260 பேர் வேப்புமனு தாக்கல்

கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், 9 தொகுதிகளிலும் 260 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடலூர் 33, குறிஞ்சிப்பாடி 19, புவனகிரி 25, சிதம்பரம் 29, பண்ருட்டி 17, திட்டக்குடி 39, நெய்வேலி 32, விருத்தாசலம் 41, காட்டுமன்னார்கோவில் 25 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் 165 ஆண்களும், 95 பெண்களும் என மொத்தம் 260 பேர் வேப்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

கடலூர்: தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் இன்று (06.04.2026) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100% வாக்குப்பதிவினை உறுதிசெய்திடும் பொருட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.