News June 22, 2024
கடலூரில் பலத்த மழை

கடலூரில் இன்று (22-ம் தேதி) காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் இரவு 8.30 மணியளவில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்த மழை சுமார் 9.30 மணி வரை நீடித்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் ஆறாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
Similar News
News August 16, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில், நேற்று, (ஆக.15) இரவு முதல் இன்று (ஆக.16) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 15, 2025
மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பயிலும் மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில், Coffee with Collector கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (ஆக.15) நடைபெற்றது. உடன் மாநகராட்சி ஆணையார் அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, பயிற்சி ஆட்சியர் மாலதி மற்றும் பலர் பங்கேற்றனர்.
News August 15, 2025
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறப்புமிக்க முருகன் கோயில்கள்

கடலூர் மக்கள் கட்டாயம் செல்ல வேண்டிய மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்கள்:
▶புது வண்டிபாளையம் சுப்பிரமணியர் கோயில்
▶திருமாணிக்குழி ஆதிசக்தி சிவபாலசுப்பிரமணியர் கோயில்
▶ பரங்கிப்பேட்டை முத்துக்குமரசுவாமி கோயில்,
▶மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
▶ வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணியர் கோயில்.