News May 5, 2024
கடலூரில் தொடர்ந்து 4வது நாளாக சதம் அடித்த வெயில்

கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடந்த 4 நாட்களாக மிகவும் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று (மே 4ம் தேதி) கடலூரில் 101.5 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக கடலூரில் வெயில் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கடும் வெயிலால் கடலூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.மேலும் இன்றும் இதே நிலைதான் தொடரும் என் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News July 4, 2025
கடலூரில் 2000 ஆண்டு பழமையான கோயில்

கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணத்திலுள்ள பூவராக சுவாமி கோயில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாகும். இங்குள்ள மூலவர் பூவராகவ சுவாமி முகம் பன்றி உருவிலும், மேனி மனித உடலுமாக காட்சி அளிக்கிறார். ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது சுயம்பு தலமாக இத்தலம் விளங்கி வருகின்றது. இங்குள்ள புஷ்கரணியில் நீராடி அரசமரத்தை சுற்றி வந்து பூவராகரை வழிபட்டால் குழந்தை பேறு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. SHARE செய்யவும்!
News May 8, 2025
கடலூர்: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 257 வனக் காவலர், வனக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 முதல் 32 வயது வரை உள்ள, 10th, 12th முடித்தவர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கவும். சம்பளமாக மாதம் ரூ.16,600 முதல் ரூ.57,900 வரை வழங்கப்படும். அரசு வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு இதை SHARE செய்யவும்!
News May 7, 2025
கடலூர்: இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மே.1ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.