News March 29, 2025
கடலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூர் மாவட்டம், சி.முட்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. சுமார் 100 நிறுவனங்களுக்கும் மேல் பங்குபெறும் இந்த முகாமில் 10,000 பணி வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது. விவரங்களுக்கு 6379410073 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பயனுள்ளவர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்..
Similar News
News April 3, 2025
கடலூரில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு?

கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இந்நிலையில் கடலூரில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை, லேசான இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
News April 3, 2025
கடலூரில் வேலை வாய்ப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (Branch Intern)உள்ள காலி பணியிடங்கைள நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூ.15,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News April 2, 2025
கடலூர் அருகே ஒருவர் என்கவுண்டர்

கடலூர் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் லாரி ஓட்டுநரிடம் 6 பேர் கொண்ட கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், வழிப்பறி கும்பலைச் சேர்ந்த விஜய் என்பவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். என்கவுண்டர் செய்யப்பட்டவர் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் என்பதும், அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது.