News April 15, 2025

கடலூரில் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு

image

கடலூர் எஸ்.பி உத்தரவின்படி கடலூர் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின்படி கடலூர் CK பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுமார் 25 பேருக்கு சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. OTP தொடர்பான குற்றங்கள், தனிநபர் கடன், டிஜிட்டல் அரெஸ்ட், LOAN APPS, SCHOOL SCHOLARSHIP SCAMS பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News

News April 16, 2025

கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 15) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளன.

News April 15, 2025

கடலூர்: அக்னிவீர் பிரிவுக்கு ஆள் சேர்ப்பு தேதி நீட்டிப்பு

image

திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்னி வீரர்களின் பல்வேறு பிரிவுகளுக்கான ஆள்சேர்ப்புக்கான பதிவு ஏப்ரல் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்களுக்கு Share செய்யுங்கள்

News April 15, 2025

சாதனை படைத்த மாணவிக்கு கேடயம் வழங்கிய ஆட்சியர்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி -1 (TNPSC GROUP-1) தேர்வில் வெற்றிபெற்ற செல்வி கதிர்ச்செல்வி அவர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (15.04.2025) கேடயம் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன் உள்ளார்.

error: Content is protected !!