News August 22, 2025
கடலூரில் கொள்ளையர்கள் கைவரிசை

கடலூர் அருகே சேடப்பாளையத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (36). சமையல் தொழிலாளியான இவர், சம்பவத்தன்று இரவு தன் வீட்டின் கதவுகளை திறந்து வைத்து விட்டு வெளியே படுத்து உறங்கியுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் சாமர்த்தியமாக வீட்டில் புகுந்து, அங்கிருந்த 2½ பவுன் தங்கம், வெள்ளி, செல்போன்கள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
கடலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News November 9, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நெகிழிப் பொருட்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு தமிழக அரசு சார்பில் விருது வழங்கப்பட உள்ளதாக என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்புத்துறையால் அனுமதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்றும், விருது பெறுவதற்கு உணவக விவரங்களை dofssavsplastic@gmail.com என்ற முகவரிக்கு நவ.25-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 9, 2025
கடலூர்: பள்ளி தாளாளர் மகன் குண்டாசில் கைது

வீராரெட்டிகுப்பம் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த ராதிகா (35) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் ஆசிரியயை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளியின் தாளாளரின் மகன் பிரின்ஸ் நவீன் (37) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் பிரின்ஸ் நவீன் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டது.


