News April 5, 2025
கடலூரில் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் – ஆணையர் உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, கடலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளும் தங்கள் அமைப்புகள் சார்பாக வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை வரும் 27ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என கடலூர் மாநகராட்சி ஆணையர் அனு ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 13, 2025
குள்ளாஞ்சாவடி அருகே டிரைவரை தாக்கி பணம் பறிப்பு

திண்டிவனத்திலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு ஜல்லி ஏற்றிக்கொண்டு லாரியை தம்பிப்பேட்டையில் சாலையோரம் லாரி டிரைவர் நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் லாரியின் கண்ணாடியை உடைத்தும், டிரைவரை தாக்கியும் மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் டிரைவரின் செல்போன் மற்றும் ரூ.25,000 பணத்தை பறித்து சென்றனர். தொடரும் இந்த சம்பவம் லாரி டிரைவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News April 13, 2025
கடலூரில் மாவட்டத்தில் 102.56 டிகிரி வெயில் பதிவு

கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று 102.56 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் கடலூர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் வெளியில் செல்லும் போது குடை மற்றும் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க..
News April 13, 2025
கடலூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் ஏப்.,17ஆம் தேதி கடலூாில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். (SHARE பண்ணுங்க)