News April 10, 2024

கடலூரில் கூடைப்பந்து அணி தேர்வு தேதி அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வரும் 13 ஆம் தேதி அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து அரங்கில் 18 வயதிற்குட்பட்ட இருபாலின வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தேர்ந்தெடுக்கப்படும் வீரர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கடலூர் மாவட்ட அணி சார்பாக கலந்து கொள்வார்கள் என கூடைப்பந்து சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 19, 2025

கடலூரில் புயல் எச்சரிக்கை கூண்டு

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர் உட்பட சென்னை, நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில், 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் (ஆகஸ்ட் 18) அறிவுறுத்தியுள்ளது.

News August 19, 2025

கடலூர்: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அறிவிப்பு

image

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு வரும் செப்.2 அன்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி கடலூர் ஒன்றிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு பள்ளி மாணவர்கள் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவோ, கல்லூரி மாணவர்கள் முதல்வர்கள் மூலமாகவோ அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW!!

News August 19, 2025

கடலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (18/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இதனை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!