News March 12, 2026

கடலூரில் அஞ்சல் சேவை மக்கள் குறைதீர் கூட்டம்

image

கடலூர் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு மன்றத்தின் கூட்டம் வருகிற மார்ச் 26 நடைபெற உள்ளது. இதில், கடலூர் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகள், புகார்கள் மற்றும் குறைகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என, கடலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கலைவாணி தெரிவித்தார்.

Similar News

News March 12, 2026

கடலூர்: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <>’Fuel@Call’ என்ற ஆப்பின்<<>> மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

கடலூர்: பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்

image

குறிஞ்சிப்பாடி அடுத்த புலியூர் காட்டு சாகையை சேர்ந்தவர் ராஜ்குமார்(30). இவர் தனது மனைவியின் அக்காள் வீட்டுக்கு சென்றிருந்த போது, அங்குள்ள குளியல் அறையில் தனது செல்போனை வைத்துள்ளார். பின்னர் தனது மனைவியின் அக்காள் குளிப்பதை அதில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் ராஜ்குமார் மீது நேற்று வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 12, 2026

கடலூர்: ரயில் மோதி முதியவர் பலி

image

விருத்தாசலம் அருகில் சென்னையில் இருந்து நேற்று இரவு ராமேஸ்வரம் நோக்கி சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரயில் சென்றபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது மோதியது. இந்த விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!