News December 30, 2025

கடலூரரில் 1,472 விவசாயிகள் பயன்!

image

கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 1,472 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் நுண்ணீர் பாசனத் திட்டம், வேளாண் பொறியியல் இயந்திரங்கள் வழங்கல், இடுப்பொருட்கள் வழங்கும் திட்டம், வேளாண் இயந்திரங்கள் வாங்கிட தனிநபர் மானியத் திட்டம், கிராம அளவிலான வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைத்தல்‌ திட்டம் இடம்பெற்றுதாக மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Similar News

News January 6, 2026

கடலூர்: வெளுத்து வாங்க போகும் மழை…

image

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கனமழையும், ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News January 6, 2026

கடலூர்: சாராயம் காய்ச்சியவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

குள்ளஞ்சாவடி போலீசார் கிருஷ்ணன்பாளையத்தில் உள்ள செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கரும்பு வயலில் சாராயம் காய்ச்சிக்கொண்டிருந்த சரவணன் (39) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் கலெக்டர் சிபி ஆதித்தியா செந்தில்குமார், சரவணனை குண்டர் சட்டத்தில் அடைக்க இன்று உத்தரவிட்டார்.

News January 6, 2026

கடலூர்: ரூ.2.10 லட்சம் மானியம் வேண்டுமா?

image

மத்திய, மாநில அரசின் உதவியோடு இலவசமாக மாட்டுக் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-ம், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. <<18777245>>(பாகம்-2) <<>>

error: Content is protected !!