News April 27, 2024
கடலில் மூழ்கி மீனவர் பலி

தூத்துக்குடி மினி சகாயபுரத்தை சேர்ந்தவர் சேசு (26) விசைப்படகு மீனவர். இவர் இன்று காலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று படகிலிருந்து தவறி கடலில் விழுந்து இறந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் இவரது உடலை மீட்டனர். இது குறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 4, 2026
அமைச்சரின் சொத்து குறிப்பு வழக்கு ஓத்திவைப்பு

தற்போது அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது வழக்கினை மார்ச்.7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
News March 3, 2026
தூத்துக்குடி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தபால் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News March 3, 2026
தூத்துக்குடி: எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை அறிவிப்பு

மதுரை, புதுச்சேரி ,காரைக்கால் உள்ளிட்ட அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில்(எய்ம்ஸ்) நிரப்பப்பட உள்ள 2,551 செவிலியர் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்சி நர்சிங், டிப்ளமோ நர்சிங் முடித்த 18 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.9,300 – 34,800 வழங்கப்படும் நிலையில் இது குறித்த முழு விவரங்களை<


