News April 13, 2025
கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

அஞ்சுகிராமம், ரஸ்தாகாடு கடற்கரை உள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று கடலில் குளிப்பதற்காக கன்னங்குளம் பகுதியைச் சேர்ந்த 3 மாணவர்கள் சென்றுள்ளனர். இதில் கல்லூரி மாணவர் ஒருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். உடன் சென்ற 2 பள்ளி மாணவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடலோர பாதுகாப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 16, 2025
குமரி: இனிமேல் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது..!

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நேற்று (செப் 15) கூறியதாவது,” சிசிடிவி கேமராக்கள் அமைப்பதால் மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1315 சிசிடிவி கேமராக்கள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது” என்றார். இதனால் குமரியில் குற்றச்சம்பங்கள் குறைய வாய்ப்புள்ளது.
News September 16, 2025
குமரி: திருடச் சென்ற இடத்தில் முதியவருக்கு நேர்ந்த சோகம்

நாகர்கோவில் கோட்டார் செட்டி தெரு பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் இன்று (செப் 16) அதிகாலையில் முதியவர் ஒருவர் கடையில் உள்ள பொருட்களை திருடி சென்று விட்டு வெளியே வரும்போது மாரடைப்பில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 16, 2025
குமரி: IOB வங்கியில் ரூ.1,00,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், Specialist Officer பணிக்கு 127 காலியிடங்கள் உள்ளன. இதற்கு சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் (அ) BE., B.TECH., MBA., முடித்தவர்கள் 03.10.2025 ம் தேதிக்குள் இந்த <