News September 12, 2025

கடலில் மிதந்து வந்த கஞ்சா பொட்டலங்கள்: போலீசார் விசாரணை

image

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கடற்கரையில் கடலில் மிதந்து வந்த 20 பார்சல்களை இன்று (செப்.,11) மீன்வளத் துறையினர் கைப்பற்றினர். அதில் 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதை போலீசாரிடம் ஒப்படைத்து போலீசார் கஞ்சா மூட்டைகளை கடத்தியது யார்?, அதை கடலில் தூக்கி வீசியவர்கள் யார்? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News November 2, 2025

புதுகை: பட்டாகத்தியுடன் மக்களை மிரட்டிய இளைஞர்கள் கைது

image

ஆலங்குடி அருகே பாத்தம்பட்டி பஸ் நிறுத்தம் பள்ளத்தை விடுதியை சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் அரிமளம் விளக்கு ரோடு செமகோட்டை பகுதியை சேர்ந்த வீர கணேஷ் ஆகிய இருவரும் பட்டக்கத்தியை வைத்து பொதுமக்களை அச்சுறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். இந்நிலையில் அவ்வழியே ரோந்து வந்த ஆலங்குடி போலீசார் இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

News November 2, 2025

புதுக்கோட்டை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுக்கோட்டை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

News November 2, 2025

புதுக்கோட்டை: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

image

புதுக்கோட்டை மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!