News November 22, 2024
கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம்

அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் சண்முகம் (37) என்பவர் உள்ளிட்ட 14 மீனவர்கள் அக்கரைப்பேட்டை துறைமுகத்தில் இருந்து கடந்த 18ஆம் தேதி மீன்பிடிக்க சென்றனர். இந்திய கடல் எல்லைப்பகுதியில் மீன்பிடிக்க சென்றபோது, மீனவர் சண்முகம் திடீரென படகில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. மாயமான மீனவரை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர்.
Similar News
News August 16, 2025
அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள்

நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று 79வது சுதந்திர தின விழா நடைப்பெற்றது. இவ்விழாவில், நாகை மாவட்டத்தில் தீயணைப்பு துறை வேளாண்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 172 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பவனந்தி, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
News August 15, 2025
நாகை: கடன் தொல்லை நீங்க இந்த கோயில் போங்க!

நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இரத்தினகிரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் உள்ள குளத்தில் விரதமிருந்து நீராடி, மூலவர்களான இரத்தினகிரீசுவர் மற்றும் மாணிக்கவண்ணாரை வழிபட்டால் கடன் தொல்லை நீங்கி, நினைத்த காரியம் நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
News August 15, 2025
நாகை மக்களே புகாரளிக்க இதை குறித்து கொள்ளுங்கள்!

நாகை மக்களே. நம் பகுதிகளில் சில சமையம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள், அளவுக்கதிகமா நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இனிமேல் ஆட்டோக்களில் அதிகமான நபர்களை ஏற்றி செல்வதை பார்த்தால், உடனடியாக 18002334233, 81100 05558 எண்களில் புகாரளியுங்கள் மேலும் உங்கள் பகுதி RTO அலுவலகத்திலும் புகாரளியுங்கள். SHARE IT!