News January 3, 2026

கடலாடி நீதிமன்றத்தில் போலி வழக்கறிஞர் ஆஜராகியது அம்பலம்

image

கடலாடி அருகே உள்ள பூதங்குடி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராம்கி (35) இவர் கடந்த 5 ஆண்டுகளாக தான் வழக்கறிஞர் என கூறி கடலாடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார். இந்நிலையில் வழக்கறிஞர் சங்கத்தினர் பார் கவுன்சில் தேர்தலுக்காக அனைவரின் அடையாள அட்டையை சோதித்த போது ராம்கி போலி அடையாள தயாரித்தது தெரியவந்தது. கடலாடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News January 6, 2026

ராம்நாடு: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

ராம்நாடு மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 6, 2026

ராம்நாடு: பஸ் புக்கிங் செய்த போது ரூ.1 லட்சம் மோசடி

image

ஆன்லைனில் பேருந்து டிக்கெட் புக் செய்த போது கூகுளில் தேடிய தவறான கஸ்டமர் கேர் எண்ணை தொடர்பு கொண்டு ரூ.1 லட்சம் பணத்தை இழந்த அகமது அஸ்லாம் என்பவர் இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், சைபர் கிரைம் காவல்துறையினர் விரைவாக விசாரணை மேற்கொண்டு முழு தொகையையும் மீட்டு இன்று காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைத்தார்.

News January 6, 2026

ராம்நாடு: ரோடு சரியில்லையா? இதில் புகார் தெரிவிங்க..

image

ராம்நாடு மக்களே உங்க பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

error: Content is protected !!