News September 26, 2024
கடற்கரை மேம்பாட்டு திட்டத்திற்கு வல்லுநர் தேடுதல் நடவடிக்கை

எண்ணுார் முதல் கோவளம் வரையிலான கடற்கரை பகுதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு தனி நிறுவனத்தை சி.எம்.டி.ஏ., உருவாக்கியது. இந்நிறுவனத்தில் தலைமை நிதி ஆலோசகர், தலைமை செயல்பாட்டு அலுவலர், நிறுவன செயலர், நகரமைப்பு வல்லுனர் உள்ளிட்ட 7 வகை இடங்களுக்கு வல்லுனர்களை தேடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.cmdachennai.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம்’ என, சி.எம்.டி.ஏ., தெரிவித்துள்ளது.
Similar News
News September 15, 2025
சென்னையில் வெறி நாய் கடித்த நபர் உயிரிழப்பு

சென்னை ராயப்பேட்டையில் ரேபிஸ் தாக்கி, சிகிச்சை பலனின்றி முகமது நஸ்ருதின் என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஜூலை மாதம் மீர்சாகிப்பேட்டை மார்கெட் அருகே அவரை தெருநாய் கடித்துள்ளது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 12ம் தேதி அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட, ரேபிஸ் தொற்று அவரை தாக்கியிருப்பது உறுதியானது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News September 14, 2025
சென்னையில் அன்புக்கரங்கள் திட்டம் நாளை தொடக்கம்

பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து பாதுகாக்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை சென்னையில் நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளி படிப்பு முடியும் வரை மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் ’அன்புக்கரங்கள் திட்டம் பள்ளிப்படிப்பு முடித்த பின் கல்லூரிக் கல்வி, உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.
News September 14, 2025
சென்னை மாணாக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.