News March 23, 2024
கடற்கரையில் ஆட்சியர் தூய்மை பணி

நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் தூய்மை பணி இன்று நடைப்பெற்றது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் தலைமை தாங்கி கடற்கரை தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தமிழ் ஒளி, மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, நகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வாக்காளர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
Similar News
News February 13, 2026
நாகை: ரூ.5 லட்சம் காப்பீடு! APPLY NOW

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய <
News February 13, 2026
நாகயில் 273 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

கீழையூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திருப்பூண்டி சாலையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை சோதனை செய்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரிய வந்தது. பின்னர் காரில் பயணித்த 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2.80 லட்சம் மதிப்பிலான 273 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
News February 13, 2026
நாகை அருகே சோகம்: ஏழ்மையால் பறிபோன உயிர்..

கீழ்வேளூர் போலீஸ் சரகம், திருக்கண்ணங்குடி சின்ன முக்கால் வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன். மீன் லோடு ஏற்றும் வேலை பார்க்கும் இவர், தனது வீட்டில் கூரை போட பணம் இல்லாமல் குழந்தைகள் பனியில் தூங்குவதாக புலம்பி வந்துள்ளார். இதில் மனமுடைந்த ஹரிஹரன் தனது கூரை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


