News March 23, 2025
கடற்கரைக்கு வருவோர் கடலில் குளிக்க வேண்டாம் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதி நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று மாலையில் ஏராளமானோர் கடற்கரைக்கு வரும் நிலையில், பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் காவல்துறை அறிவுறுத்தல்.
Similar News
News April 6, 2025
நிற்காமல் சென்ற ரயில்: விசாரணைக்கு உத்தரவு

மயிலாடுதுறை-திருச்சி விரைவு ரயில் நேற்று காலை 8:50 மணிக்கு பாபநாசம் ரயில் நிலையத்தித்திற்கு வந்தது. இந்நிலையில் நடைமேடையில் நிற்காமல் ரயில் 200 மீட்டர் தூரம் தள்ளி நின்றது. இதனால் பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். பின்னர் பின்னோக்கி எடுத்து வரப்பட்டு பயணிகளை ஏற்றிச் சென்றது. இதுகுறித்து தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளர் துறைரீதியிலான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
News April 5, 2025
மயிலாடுதுறை அருகே அதிசய கிணறு

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு எதிரில் உள்ள பிள்ளையார் கோயிலின் கிணறு கடலுக்கு அருகில் உள்ளது. கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடந்தும் கடல் நீர் அருகில் சூழ்ந்த பிறகும் நீரின் சுவை கொஞ்சமும் மாறவில்லை. தரங்கை மக்கள் இன்றும் இதனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சுற்றுலா பயணிகள் கடலில் குளித்த பிறகு இக்கிணற்றில் மீண்டும் குளிக்க வருகிறார்கள். இது சுவையான நல்ல நீராக இருப்பதால் ஆச்சரியப்பட்டு செல்கிறார்கள்.
News April 5, 2025
வேலையில்லா இளைஞர்களுக்கு நற்செய்தி

மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், https://tnvelaivaaippu.gov.in/download.html என்ற இணையதள பக்கத்திலும், 04364-299790 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என கூறியுள்ளார்.