News April 6, 2025

கடன் பெற்றவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிப்பதாக மிரட்டல்

image

புதுவையைச் சேர்ந்த விஜய் என்பவர் ஆன்லைன் மூலம் கடன்பெற்று அதை திருப்பியும் செலுத்தியுள்ளார். இதனிடையே மர்ம நபர் அவரை தொடர்பு கொண்டு, மேலும் பணம் தராவிட்டால் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி, ரூ.37,000 பணத்தை பெற்றதாக விஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில், தற்போது சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 7, 2025

புதுவை: ஆன்லைனில் ரூ.49,000 இழந்த நபர்

image

புதுச்சேரி, சின்னக்கடையை சேர்ந்தவர் வசந்த ராஜன். இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பி வசந்தராஜன் ரூ.49,000 முதலீடு செய்து ஏமாந்ததுள்ளார். பின் அவர் நேற்று கோரிமேட்டில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தார். இதுபோன்ற போலி அழைப்புகளை பொதுமக்கள் நம்பவேண்டாமென காவல்துறை எச்சரித்துள்ளனர்.

News April 7, 2025

காரை: கப்பல் துறைமுகத்தில் தேசிய கடல்சார் தினம்

image

காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் தேசிய கடல்சார் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் தலைமை தாங்கினார். துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி சச்சின் ஸ்ரீவஸ்தவா முன்னிலை வகித்தார். இதில், கடல்சார் துறையின் முக்கிய அம்சங்களை வலியுறுத்தி, துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரிகளின் உரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.

News April 7, 2025

புதுச்சேரியில் பிரபல குற்றவாளி அதிரடி கைது

image

கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற ஸ்டிக்கர் மணி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்தார். இவர் நீதிமன்ற உத்தரவுப்படி காரைக்காலில் கையெழுத்திட வேண்டும். ஆனால் கையெழுத்து இட செல்லாமல் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த ஓதியஞ்சாலை போலீசார் ஸ்டிக்கர் மணியை மீண்டும் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!