News March 16, 2025
கடன் தொல்லை நீக்கும் திருவுடைநாதர்

வடசென்னைப் பகுதியில், மணலி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் அருள்மிகு திருவுடை நாயகி சமேத திருவுடைநாதர் கோயில் உள்ளது. பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடன் தொல்லையால் அவதிப்படுவோர், திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்க, படிப்பில் சிறந்து விளங்க இங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். ஷேர் பண்ணுங்க.
Similar News
News March 16, 2025
சென்னையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்

சென்னையில் பார்க்கவேண்டிய 10 முக்கிய இடங்கள்: 1.மெரினா கடற்கரை, 2.அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, 3.வள்ளுவர்கோட்டம், 4.ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில், 5.எலியட்ஸ் கடற்கரை, 6.விஜிபி கோல்டன் பீச், 7.செயின்ட் தாமஸ் கதீட்ரல் பசிலிக்கா, 8.ஆயிரம் விளக்கு மசூதி, 9.கபாலீஸ்வரர் கோவில், 10.வடபழனி முருகன் கோவில். ஷேர் பண்ணுங்க.
News March 16, 2025
சென்னைவாசிகள் கவனத்திற்கு..! ஆட்டோ கால் டாக்ஸி ஓடாது!

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் வருகின்ற மார்ச் 19-ம் தேதி ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது என தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதால் ஆட்டோ, கால் டாக்ஸிகள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News March 16, 2025
ஒரே நாளில் 7 இடங்களில் மருத்துவ முகாம்

சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பா.சுப்ரமணியன், “கோடை வெயில் தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மட்டும் சென்னை முழுவதும் 7 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. காது, மூக்கு, சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3 – 4 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்” என்றார்.