News July 9, 2025
கடன் தொல்லை நீக்கும் கால பைரவர்

திருவண்ணாமலை கோவிலின் பிரம்ம தீர்த்தக்கரை அருகே கால பைரவர் சன்னதி உள்ளது. இங்குள்ள பைரவர் ஒரே கல்லால் 8 கரங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News August 25, 2025
உரிமையற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிமம் இல்லாமல் வைத்துள்ள நாட்டு துப்பாக்கிகளை வருகிற செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் அறிவித்துள்ளார். உரிமை இல்லாத துப்பாக்கிகளை குறிப்பிடப்பட்ட தேதிக்குள் வனத்துறை அலுவலகங்களில் ஒப்படைக்கும் நபர்களுக்கு எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது. காலக்கெடு முடிந்த பின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
News August 25, 2025
இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 25/08/2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 25, 2025
தி.மலை: தாசில்தார் லஞ்சம் வாங்கினால் என்ன செய்வது?

தி.மலை மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (04175-232619) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.