News April 6, 2025

கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டு தற்கொலை

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே நாயனத்தியூர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன். இவரின் மனைவி சோபிகா (40). இந்நிலையில் அன்பரசன் உடல்நலம் பாதித்து கடந்த 6 மாதங்களாக படுத்த படுக்கையாக உள்ளார். இதனால் சோபிகா
போதிய பணம் இல்லாமல் தவித்து வந்தார். கணவனின் மருத்துவ செலவிற்கு நிறைய கடன்பெற்ற நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Similar News

News April 10, 2025

மருத்துவமனை ஓனர் மீது மாணவிகள் பாலியல் புகார்

image

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் நிஷா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மருத்துவமனைக்கு செவிலியர் பயிற்சிக்காக வரும் மாணவிகளுக்கு, மருத்துவமனை ஓனர் ஜாவித் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக இன்று அம்பலூர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஜாவித்திடம் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 10, 2025

மணிமேகலை விருதுக்கான அறிவிப்பு வெளியானது

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2024,2025 ஆம் ஆண்டுக்கான மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் வட்டார அமைப்புகளில் சிறந்து விளங்கிய குழுக்களுக்கு மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது. நேற்று (ஏப்-09) வெளியிடப்பட்ட அறிவிப்பில் 15-04-25 முதல் விண்ணப்பம் தொடங்கவுள்ளது. 30-04-25 கடைசி தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 10, 2025

ராணுவத்தில் வேலை: இன்றே கடைசி நாள்

image

அக்னிவீர் திட்டத்தின்படி, ராணுவத்தில் பொதுப் பணியாளா், தொழில்நுட்பம், எழுத்தா், கிடங்கு மேலாளா், தொழிலாளி உள்ளிட்ட 25,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு தேர்ச்சியான இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றைக்குள் இந்த <>லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!