News March 23, 2026

கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சியான தகவல்!

image

திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓரிரு நாள்களில் வெளியாக உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கியுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் EPS அறிவித்துள்ளார். இதனிடையே, திமுக, அதிமுக 2 கட்சிகளும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் பயிர்க் கடன், நகைக்கடன் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Similar News

News April 3, 2026

ஹெல்மெட் பற்றி இந்த விஷயம் தெரியுமா?

image

➤சிவப்பு ஹெல்மெட்: தீயணைப்பு வீரர்கள் போன்ற அவசரகால சேவைகளில் ஈடுபடுபவர்கள் அணிகிறார்கள் ➤மஞ்சள்: கட்டுமான தொழிலாளர்களால் பயன்படுத்தப்படுகிறது ➤நீல ஹெல்மெட்: எலக்ட்ரீஷியன், பிளம்பிங் போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் அணிகிறார்கள் ➤வெள்ளை: பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள் போன்ற தலைமை பதவிகளில் உள்ளவர்கள் ➤பச்சை: பாதுகாப்பு ஆய்வாளர்கள், தள மேற்பார்வையாளர்கள் அணிகிறார்கள். SHARE.

News April 3, 2026

வரியே கட்டாமல் ஏமாற்றும் விஜய்: MRK பன்னீர்செல்வம்

image

நடிகர்கள் ஏமாற்றிவிடுவார்கள்; கொள்கை உள்ளவர்கள்தான் தேவை என MRK பன்னீர் செல்வம் பேசியுள்ளார். திண்டிவனம் வேட்பாளர் வன்னியரசை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், சிலர் கட்சி தொடங்கிய உடனே CM ஆக வேண்டும் என்ற கனவில் இருப்பதாக கூறினார். மேலும், வரியே கட்டாமல் நாட்டை ஏமாற்றுபவர், நாட்டு மக்களை ஏமாற்றமாட்டாரா எனவும், பிளாக்கில் டிக்கெட் விற்பவர்கள் எல்லாம் வேண்டுமா என்றும் மறைமுகமாக விஜய்யை சாடியுள்ளார்.

News April 3, 2026

வெள்ளி ஆபரணங்கள்.. கிலோவுக்கு ₹10,000 குறைந்தது

image

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹800 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், வெள்ளி விலையில் மாற்றமில்லை. இதனால் இன்றும் 1 கிராம் வெள்ளி ₹255-க்கும், 1 கிலோ ₹2.55 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. ஏப்.1-ல் 1 கிலோ ₹2.65 லட்சத்துக்கு விற்பனையான நிலையில், தற்போது ₹10,000 குறைந்துள்ளது. இன்று முதல் 3 நாள்கள் விடுமுறை என்பதால், வெள்ளி நகை பிரியர்கள் நகைக்கடைகளில் குவிகின்றனர்.

error: Content is protected !!