News February 17, 2025
கடன்,நோய் தீர்க்கும் திருமூகூர் காளமேகப்பெருமாள்

மதுரைக்கு அருகிலுள்ள திருமூகூரில் அமைந்துள்ள காளமேகப்பெருமாள் கோயில் பழமையான பாண்டியர் கால கட்டடக்கலைக்கு சிறந்த உதாரணம். இந்த கோயில், சுதர்சன சேனையை தனி சன்னதியில் கொண்டது என்பது விசேஷம். தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தலத்தில் குடும்ப கடன், நோய் தீர பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். Share it
Similar News
News March 4, 2026
மதுரை: டிபன் கேரியர், ஹாட்பாக்ஸ், சேலை வழங்கிய திமுகவினர்

மதுரை மாநகர், புறநகர் தெற்கு, புறநகர் வடக்கு ஆகிய பகுதிகளில் வாக்காளர்களை குளிர்விக்கும் விதமாக ஹாட் பாக்ஸ், டிபன் கேரியர், சேலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஒவ்வொரு பகுதியிலும் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் திமுகவினர் வழங்கி வருகிறார்கள். இதில் மதுரை கிழக்கு, வடக்கு தொகுதியில் திமுக மகளிர் அணியினர், ஒவ்வொரு பூத்துக்கும் வெல்லும் தமிழ் பெண்கள் என்ற பரப்புரையில் களம் இறங்கி உள்ளனர்.
News March 4, 2026
மதுரை: கம்மியான விலையில் பைக் வேண்டுமா?

மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு; மதுரை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 26 வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் தலைமையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 10ம் தேதி பொது ஏலம் நடத்தப்படுகிறது. வாகனங்களை பாா்வையிட்டு முன் பணமாக இரு சக்கர வாகனத்துக்கு ரூ.5 ஆயிரத்தை வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம். *ஷேர் பண்ணுங்க
News March 4, 2026
மதுரை: பெரியார் பேருந்து நிலையம் அருகே சடலம் மீட்பு

மதுரை டவுன் ரயில் நிலையம் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள நகர பேருந்து நிறுத்தம் அருகில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க விலாசம் தெரியாத வாலிபர் நேற்று இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் குறித்து விசாரணைசெய்து வருகின்றனர்.


