News July 1, 2024

கடனுதவி பெற சிறுபான்மையினருக்கு அழைப்பு

image

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை சமூகத்தினா் தங்களுக்குத் தேவையான கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Similar News

News September 12, 2025

தி.மலை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

திருவண்ணாமலை மக்களே சமீப காலமாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின்வயர் அறுந்து விழுந்தலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழக அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 12, 2025

தி.மலை: போக்ஸோ வழக்கில் 20 ஆண்டு சிறை

image

வந்தவாசி அருகே அருங்குணத்தை சேர்ந்த தொழிலாளி சதீஷ் (35), 2018ல் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், தி.மலை அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். நீதிபதி காஞ்சனா, (செப்டம்பர் 10) அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் ₹15,000 அபராதமும் விதித்ததோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹1 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.

News September 12, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (11.09.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!