News November 7, 2025

கடத்தல் வழக்கு: போலீஸுக்கு அன்புமணி கண்டனம்

image

தமிழகத்தில் <<18226171>>பெண்களுக்கு எதிரான குற்றங்கள்<<>> அதிகரிக்கும் நிலையில், திமுகவை எந்த கொம்பனாலும் தொட முடியாது என CM ஸ்டாலின் வீர வசனம் பேசி கொண்டிருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். மேலும், பெண்ணை மீட்க வேண்டிய போலீஸ், கடத்தல் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என கூறுவது பொறுப்பற்ற பதில் எனவும் சாடியுள்ளார். எவரேனும் புகார் அளித்தால்தான் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News

News February 11, 2026

மைசூர் சாண்டல், தமன்னா… மீண்டும் சர்ச்சை வெடித்தது

image

பிரபல மைசூர் சாண்டல் சோப்புக்கு விளம்பர தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டது கர்நாடகாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கர்நாடக அரசு நிறுவனத்தின் ₹6.2 கோடி மதிப்புள்ள விளம்பர ஒப்பந்தத்துக்கு, கன்னட நடிகையரை பயன்படுத்தாமல் வடமாநிலத்தரவரான தமன்னாவை நியமித்துள்ளது காங்கிரஸ் அரசின் கன்னட எதிர்ப்பு மனநிலையை காட்டுவதாக பாஜக MP கே.சுதாகர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஒப்பந்தம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

News February 11, 2026

இந்தியா – பாக். போட்டியால் எகிறிய விமானக் கட்டணம்!

image

டி20 WC-ல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – பாக்., போட்டியால் விமான டிக்கெட் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னை – இலங்கை இடையேயான கட்டணம் சுமார் ₹9,000 வரையுள்ள நிலையில், தற்போது ₹43,000 வரை அதிகரித்துள்ளது. பிப்.15-ல் கொழும்புவில் நடக்கும் இப்போட்டியை நேரில் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதால் விமானங்களில் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

News February 11, 2026

காதலனை கரம்பிடித்தார் நடிகை கீர்த்தி ❤️❤️

image

பிரபல தமிழ் சீரியல் நடிகை கீர்த்திக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இன்ஸ்டாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் கீர்த்தி, தனது நீண்டகால காதலர் சாய் க்ரிஷை கரம் பிடித்துள்ளார். இந்த காதல் திருமணத்துக்கு கிர்த்தி ரசிகர்கள் பலரும் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

error: Content is protected !!