News February 17, 2025
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

அரக்கோணம் டவுன் போலீசார் வின்டர்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசார் வருவதை கண்டு அங்கிருந்து தப்பியோட முயன்ற 2 பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த துரைராஜ் (23) மற்றும் முத்துவைரம் (25) என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 5, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் கடைக்கு செல்பவர்கள் கவனத்திற்கு!

ராணிப்பேட்டை: ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். இந்த <
News August 5, 2025
இராணிப்பேட்டை: கஷ்டங்களை தீர்க்கும் அதிசய தளம்

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பேரூர் என்னும் இடத்தில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மோகனவல்லி சமேத கங்காதீஸ்வரர் ஆலயம் உள்ளது. பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமாக, அதாவது `அப்பு ஸ்தலமாக’ இந்த கோயில் இருப்பது மற்றுமொரு விசேஷமாகும். இந்த கோயில் பித்ரு தோஷம் நீக்குகின்ற, பெருநோய் சாபங்கள் நிவர்த்தி செய்கின்ற சக்தி வாய்ந்த பரிகார ஸ்தலம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஷேர் பண்ணுங்க.
News August 5, 2025
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

ராணிப்பேட்டை காவல்துறை இன்று (ஆகஸ்ட் 5) சமூக வலைத்தளத்தின் விழிப்புணர்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் பேருந்தில் படியில் நின்று பயணம் செய்வது ஆபத்தானது எனவும், “பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் அடுத்த பேருந்திற்காக காத்திருங்கள்” என்ற வாசகத்துடன் செய்தி இடம்பெற்று இருந்தது. மக்களே யாரும் பேருந்து படியில் நின்று பயணம் செய்யாதீர்கள்! விழிப்போடு இருங்க!