News May 18, 2024

கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது

image

கொரடாச்சேரி போலீசார் நேற்று நடத்திய அதிரடி நடவடிக்கையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட விஜய், சிவசங்கர், விக்னேஸ்வரன், தேவா என்கிற ஜெயவல்லவன் , மணிகண்டன், ரஞ்சித் குமார் ஆகிய 6 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்த போலீசாரை எஸ்பி ஜெயக்குமார் பாராட்டினார்.

Similar News

News July 8, 2025

திருவாரூர்: திடீர் தீ விபத்து-4 கூரை வீடுகள் சேதம்

image

திருவாரூர், பள்ளங்கோவில் புலியடி திடல் பகுதியில் ராஜேந்திரன் (65), செல்வராஜ் (70), தினேஷ் (35), சந்திரகாசன் (60) ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் 12 மணி அளவில் திடீரென இவர்கள் வீட்டில் தீப்பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 4 வீடுகளும் தீயில் எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தன.

News July 8, 2025

திருவாரூர் ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 7, 2025

திருவாரூரில் ட்ரோன்கள் பறப்பதற்கு தடை

image

தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு தடை விதித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!