News November 21, 2024

கஞ்சா விற்பனை செய்த கணவன் – மனைவி கைது

image

திண்டிவனம் அருகே கஞ்சா விற்பனை செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து, 1.300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. புதுவை மாநிலம் லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த பவானி – பிரகாஷ் தம்பதியினரை கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். 1.300 கிராம் கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து இவர்களை சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 6, 2025

தேர்வர்களுக்கு சிறப்பு பஸ்: ஆட்சியர்

image

விழுப்புரத்தில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரி,அரசு கலை கல்லுாரி வி.ஆர்.பி.,மேல்நிலைப் பள்ளி,அக்ஷர்தம் சென்ட்ரல் பள்ளி ஆகிய இடங்களில், ஆக.17,18 தேதிகளில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் குடிமைப் பணிகளுக்கான தேர்வு நடைபெற உள்ளது. அனைத்து தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்வதற்காக சிறப்பு பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

விழுப்புரத்தில் இன்று (ஆக.6) உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.6) உங்களுடன் ஸ்டாலின் முகாம் திண்டிவனம் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், வானூர் வட்டாரம் பி.பி.எஸ் மஹால் டி.பரங்கனி, மேல்மலையனூர் கோடிஸ்வரன் திருமண மஹால் பெருவளூர், முகையூர் அலமேலு நாகராஜன் திருமண மண்டபம் அந்திலி, கோலியனூர் எம்.டி சேஷாத்திரி திருமண மண்டபம் தோகைபாடி, செஞ்சி காட்டுசித்தாமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. ஷேர் பண்ணுங்க.

News August 5, 2025

விழுப்புரம் குடோன் ஆய்வில் 27 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் மாயம்

image

விழுப்புரம் மாவட்ட டாஸ்மார்க் குடோனில், சமீப காலமாக மது பாட்டில்கள் மாயமானதாக எழுந்த புகாரில் அடிப்படையில் இன்று சென்னை அதிகாரி குழுக்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பதிவேட்டில் உள்ள எண்ணிக்கையை விட 27 லட்சம் மதிப்புள்ள மதுபான பாட்டில்கள் மாயமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தத் தொகையை அரசுக்கு, மாவட்ட அதிகாரிகள் அபராதமாக செலுத்த வேண்டும் என ஆய்வு குழுவினர் உத்தரவிட்டனர்.

error: Content is protected !!