News January 7, 2026

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது

image

விழுப்புரம் பழைய நகராட்சி பூங்கா அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்ததில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்து நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் அகரம் பேட்டை நிர்மல் குமார் என தெரியவந்தது மேலும் அவரிடம் இருந்து சுமார் 100 கிராம் எடை கொண்ட கஞ்சா, பணம் ரூபாய் 3000/- மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News February 1, 2026

விழுப்புரம்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது ஆகியவை VAO-வின் வேலை ஆகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றாலும், லஞ்சம் கேட்டாலும் இந்த நம்பரில் (04146-259216) புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்க.

News February 1, 2026

திருவெண்ணெய்நல்லூர் மேற்கூரையில் இடிந்து இருவர் காயம்

image

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தில் கலைச்செல்வி, மனைவி தீபா இவர்கள் இருவரும் பள்ளியில் சமையலராக வேலை செய்து வருகின்றனர்.
நேற்று காலை 11:30 மணியளில் சமையலறை கட்டிடத்தின் மேற்கூரையில் எதிர்பாராதவிதமாக சிமெண்டு காரைகள் பெயர்ந்து கலைச்செல்வி, தீபா ஆகியோர் மீது விழுந்தது. இதில், 2 பேரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
<

News February 1, 2026

விழுப்புரம்: வாட்ஸ்அப்பில் இலவச சட்ட ஆலோசனை பெறுவது எப்படி?

image

விழுப்புரம் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க

error: Content is protected !!