News November 11, 2024

கஞ்சா போதையில் செல்போன் கேட்டு தாக்கிய நபர்

image

வாணியம்பாடி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் நேற்று (நவ 10) மாலை வாக்கிங் செல்வதற்காக வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே வந்த போது, அங்கு கஞ்சா போதையில் வந்த நபர், சிவக்குமாரிடம் செல்போன் கேட்டு தகராறில் ஈடுப்பட்டு, அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சிவக்குமார் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News December 11, 2025

திருப்பத்தூர்: செக் மோசடி; பலே கில்லாடிகள் கைது!

image

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் சுந்தரம்பள்ளி பகுதியில் கடந்த மாதம் சென்னையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(35), மதுமிதா(31) ஆகியோர் ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்துக்கு ரூ.3 கோடி காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபட்டனர். இதுகுறித்து நில உரிமையாளர்கள் பழனி(36), சரோஜா(32) ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று(டிச.10) இரவு, கந்திலி போலீசார் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News December 11, 2025

திருப்பத்தூரில் மின்னணு இயந்திரங்கள் ஆய்வு

image

திருப்பத்தூரில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று (டிச.11) மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனான இந்த ஆய்வு மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News December 11, 2025

திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் காவல்துறையின் சார்பில் தினம்தோறும் ஓர் எச்சரிக்கை செய்தி வெளியிடப்படுகிறது. அவ்வாறு இன்று (டிச.11) வெளியிடப்பட்ட செய்தியில் Instagram-ல் லைக் போட்டால் பணம் கிடைக்கும் என்னும் விளம்பர குறுஞ்செய்தியை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு முதலில் சிறிய தொகையை கொடுப்பதுபோல் கொடுத்து பின்னர் பெரிய தொகையை திருடும் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!