News August 23, 2025
கஞ்சா புகார்: ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்.

கண்டாச்சிபுரம் அடுத்த ஒட்டம்பட்டு ஊராட்சித் தலைவர் முருகன், நேற்று (ஆக.22) கிராம மக்களுடன் இணைந்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில், கஞ்சா விற்பனை குறித்துத் தான் தகவல் தெரிவித்ததால் தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News September 16, 2025
JUST NOW விழுப்புரம்: அன்புமணியின் பொதுக்குழு செல்லாது

அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது, அதில் நியமிக்கப்பட்ட பதவிகளும் செல்லாது, என இன்று(செப்.16) விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் MLA ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். ராமதாசுக்கு தெரியாமல் கட்சி அலுவலகத்தின் முகவரி தேர்தல் ஆணையத்தில் மாற்றப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். தலைவரல்லாத அன்புமணி எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
News September 16, 2025
விழுப்புரம்: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்.
News September 16, 2025
விழுப்புரம்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு<