News April 2, 2025
கஞ்சா கடத்திய 4 பேர் கைது: 210 கிலோ கஞ்சா பறிமுதல்

வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக ஆற்காடு தாலுகா காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சோதனை மேற்கொண்ட போலீசார் 210 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்களை பறிமுதல் செய்து ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த ரெலிமஜி, கவுரப் திருப்பிடிகா உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Similar News
News July 6, 2025
ராணிப்பேட்டையில் விவசாய மருந்து விலை குறைவு

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மற்றும் பூச்சியியல் தடுப்பு மருந்துகளின் விலை இன்று சற்று குறைவடைந்துள்ளது. குறிப்பாக, 1 லிட்டர் மருந்து ரூ.15 முதல் ரூ.25 வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். விலை குறைவால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்து, இது சாகுபடிக்கு பெரும் நிவாரணமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
News July 6, 2025
ராணிப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த விவரங்கள் அந்தந்த நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், மூலம் அறிவிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்
News July 6, 2025
ராணிப்பேட்டை சோழிங்கரில் மர்ம காய்ச்சல்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யூனியன் மருதாலம் பஞ்சாயத்து சேர்ந்த கசத்தூர் கிராமத்தில் வசிக்கும் பொது மக்களுக்கு, சில நாட்களாக காய்ச்சல் மற்றும் கால் வீக்கம் ஏற்பட்டது. இதில் பொது மக்களுக்கு பாதிக்கப்பட்டு வாலாஜா அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், சுகாதர துறை முகாமிட்டு காய்ச்சல் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை.