News January 17, 2025
கஞ்சா கடத்திய புதுச்சேரி வாலிபர்கள் கைது

காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனை சாவடியில் வேலூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ்சை சோதனை செய்தனர். அதில் புதுச்சேரியை சேர்ந்த தினேஷ் (20), ராம்குமார் (28) ஆகிய 2 பேர் கொண்டு பையில் 2 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 23, 2025
வேலூர்: அரசு சேவைகள் இனி அருகாமையில்!

சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற கோரிக்கைகளுக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி அலுவலர்கள் நேரடியாக உங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்க உள்ளனர். <
News August 23, 2025
வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.
News August 22, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 26.08.2025 முதல் 12.09.2025 வரை காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.