News January 18, 2026
கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்: அன்புமணி

TN-ல் கஞ்சா சீரழிவை கட்டுப்படுத்த DMK அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அன்புமணி சாடியுள்ளார். X பதிவில் அவர், திருவள்ளூரில் கஞ்சா போதை கும்பல்கள் நடத்திய தாக்குதல்களை சுட்டிக்காட்டி, இதுபற்றி CM ஸ்டாலின் வாயைக் கூட திறக்க மறுப்பதாக தெரிவித்துள்ளார். இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி சமூகத்திற்கு எதிரானவர்களாக மாற்றிய ஒற்றை காரணமே, DMK-ஐ ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 25, 2026
மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு!

மாநில அரசியலுக்கு திரும்ப விரும்புவதாக மத்திய தொழில் துறை அமைச்சரும், மஜத தலைவருமான குமாரசாமி தெரிவித்துள்ளார். ஹாசனில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், மாநில விவசாயிகளுக்கு செய்ய விரும்பிய சிலவற்றை தன்னால் செய்ய முடியவில்லை என வேதனையுடன் கூறியுள்ளார். இதனால், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 2028 பேரவைத் தேர்தலுக்காக மாநில அரசியலில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News January 25, 2026
ஜன நாயகன் படத்திற்கு புதிய சிக்கல்?

‘ஜன நாயகன்’ மேல்முறையீட்டு வழக்கில் ஜன.27-ல் மெட்ராஸ் HC தீர்ப்பு அளிக்கவுள்ளது. இதில் இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினால் வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்படும். அவர் வழக்கை புதிதாக விசாரித்து தீர்ப்பளிப்பார். அத்தீர்ப்பு முந்தைய இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளில் ஒன்றுடன் ஒத்துப்போனால், அது பெரும்பான்மையாக கருதப்படும். இதற்கு காலம் ஆகும் என்பதால் பட ரிலீஸ் மேலும் தாமதமாகலாம்.
News January 25, 2026
முதல் முறை வாக்காளர்களை கொண்டாடுங்கள்: PM மோடி

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வாக்களிப்பது ஒரு புனிதமான அரசியலமைப்பு சிறப்புரிமை மட்டுமல்ல எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான கடமை எனக் கூறியுள்ளார். முதல் முறையாக வாக்குரிமை பெற்றுள்ள இளைஞர்களை ஒட்டுமொத்த சமூகமும் கொண்டாட வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், வாக்காளராக ஒருவர் மாறுவதன் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.


