News April 29, 2025
கஞ்சனூர் அருகே கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி

மேல்காரணை கன்னியப்பன் மகன் தன்ராஜ்(22). நேற்று அதே பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். கிணற்றில் குதித்தவர் மேலே வரவில்லை. அவருடன் குளித்த நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் கஞ்சனுார் போலீசார், அன்னியூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தன்ராஜ் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கஞ்சனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 29, 2025
விழுப்புரத்தில் பார்க்க வேண்டிய அம்மன் கோயில்

▶️ அங்காளபரமேசுவரி அம்மன் கோயில், மேல்மலையனூர்
▶️ அவலூர்பேட்டை சாமுண்டீஸ்வரியம்மன் கோயில்
▶️ வீரவாழியம்மன் திருக்கோயில், விழுப்புரம்
▶️ மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில்
▶️ குமாரகுப்பம் ஜலத்துவாழியம்மன் கோயில்
▶️ திண்டிவனம் அஞ்சாத்தம்மன் கோயில்
▶️ ஓங்கூர் திரௌபதியம்மன் கோயில்
▶️ வளவனூர் கோணம்மன் கோயில்
நீங்கள் செல்ல விரும்பும் நபர்களுடன் ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
விழுப்புரம்: பெட்ரோல் குண்டு வீசிய வாலிபருக்கு குண்டாஸ்

விழுப்புரத்தில் மொபைல் சர்வீஸ் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று (ஏப்.28) கைது செய்யப்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த அருண்குமார், கடந்த மார்ச் 28ம் தேதி விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள மொபைல் சர்வீஸ் கடையில் தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தார். டவுன் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று அவரை குண்டாஸில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News April 28, 2025
ஒருமுறை இந்த கோயிலுக்கு போனால் போதும்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில். இங்குள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் செல்வம் பெருகும். கடன் பிரச்சினை அகலும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். செவ்வாய் தோஷம் நீங்கும். திருமணம் கைகூடும். சாந்த மூர்த்தியாக காட்சிதரும் நரசிம்மரை வணங்கினால் கணவன், மனைவி இடையே உள்ள பிரச்னைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க