News April 25, 2024

கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் சிறப்பு

image

அரியலூர் ஜெயங்கொண்டத்திலுள்ள கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் முதலாம் ராஜராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இதன் கோபுரம் 160 அடி உயரம் கொண்டது. கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக அமைத்து இக்கோவிலைக் கட்டினார். தஞ்சை பெருவுடையார் கோவிலை ஒத்த அமைப்புடன் இது கட்டப்படுள்ளது.இக்கோவிலை ஐக்கியநாடுகள் அமைப்பு, உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது சிறப்பிற்குரியது

Similar News

News January 2, 2026

அரியலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

அரியலூர்: பொங்கல் பரிசு… முக்கிய அறிவிப்பு!

image

தமிழக அரசால் ஆண்டுதோறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அப்படி உங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமில்லாமலோ அல்லது சரியாக வந்து சேரவில்லை என்றால் ‘1800 425 5901’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு அலைச்சல் இல்லாமல் உங்களால் புகாரை அளிக்க முடியும். மேலும் இந்த எண்ணின் மூலமாக ரேஷன் கடை மற்றும் ரேஷன் பொருட்கள் குறித்தும் நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

‘அரியலூர்’ பெயர் எப்படி வந்தது தெரியுமா?

image

‘ஹரியலூர்’ என்பதே காலப்போக்கில் ‘அரியலூர்’ என மாறியதாக கூறப்படுகிறது. அரி+இல்+ஊர் = அரியலூர்; அரி-விஷ்ணு, இல் உறைவிடம், ஊர்-பகுதி; பகவான் விஷ்ணு உறைவிடம் கொண்ட பகுதி என்பது இதன் பொருள். விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளதாலும் இப்பெயர் வந்திருக்கலாம். மேலும், ‘அரியல்’ என்ற ஒருவகை பானத்தாலும் இப்பெயர் என சொல்லப்படுகிறது. இதுபோல உங்க ஊர பற்றி உங்களுக்கு வேறு பெயர்க்காரணம் தெரியுமா COMMENT பண்ணுங்க.

error: Content is protected !!