News July 24, 2024

கங்கனாவின் வெற்றியை எதிர்த்து வழக்கு

image

கங்கனா ரணாவத்தின் வெற்றியை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் நேகி, இமாச்சல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 100-ன் கீழ், கங்கனா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கும்படி மனுவில் கோரியிருக்கிறார். இமாச்சல் மாநிலத்தின், மண்டி தொகுதியில் பாஜக சார்பில் கங்கனா ரணாவத் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 10, 2026

சனி தொல்லையை நீக்கும் வெற்றிலை பரிகாரம்!

image

சனீஸ்வர பகவானின் தாக்கத்திலிருந்து விடுபட வெற்றிலை வழிபாடு உதவும். ஒரு தட்டில் 2 வெற்றிலை, 3 பாக்குகள், 11 நாணயங்களை வைக்கவும். அதன் முன், நெய்யில் தீபம் ஏற்றி வையுங்கள். இயன்ற ஒரு பொருளை நைவேத்தியமாக படைக்கவும். வடக்கு திசை பார்த்தவாறு ‘ஸ்ரீ சொர்ண ஆகர்சன பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். இந்த பரிகாரத்தை வளர்பிறை அஷ்டமியில் செய்வது கூடுதல் பலனை கொடுக்கும். SHARE IT.

News March 10, 2026

விஜய்க்கு அழைப்பு.. அதிரடியாக நீக்கிய நயினார்

image

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து A.N.S.பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். NDA-வில் இணையுமாறு விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்திருந்த நிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர் என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

News March 10, 2026

திமுக – காங்கிரஸ் கூட்டணி சாத்தியமானது எப்படி? ப.சி

image

நீண்ட இழுபறியுடன் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியான நிலையில், அதுகுறித்து ப.சிதம்பரம் மனம் திறந்துள்ளார். பேச்சுவார்த்தை குழுவில் 2,3 பிற மாநிலத்தவர்கள் இருந்ததால் இடைவெளி இருந்தது; ஆனால் ஸ்டாலினுக்கு நெருங்கிய தான் பேசியதும் எல்லாம் சரியாகிவிட்டது என்றார். காங்கிரஸுக்கு திமுக துணையும், திமுகவுக்கு காங்கிரஸின் துணையும் வேண்டும். அதனால் கூட்டணி முறியாது என்பது தனக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!