News December 29, 2025

ஓஷோவின் பொன்மொழிகள்!

image

*உன்னை நேசித்தால் நீ பிறரை நேசிப்பாய், உன்னை வெறுத்தால் நீ பிறரையும் வெறுப்பாய் *எங்கேயும், எப்போதும், எப்படி இருந்தாலும், எதுவாக இருந்தாலும் ஆனந்தமாய் இருந்திடுங்கள் *பேசும்போது பயப்படாதீர்கள்! பயப்படும்போது பேசாதீர்கள்! *வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை. வேலையை விரும்பிச் செய்பவன் அரசன் *இறைவன் வேண்டுவதைத் தருபவர் அல்ல, வாழ்க்கைக்குத் தேவையானதைத் தருபவர் *நட்சத்திரங்களை காண இருள் தேவைப்படுகிறது

Similar News

News January 21, 2026

தற்கொலைக்கு சமம் என்று சொல்லிவிட்டு கூட்டணியா?

image

அதிமுக-பாஜக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளதாக<<18913412>> TTV தினகரன்<<>> அறிவித்துவிட்டார். இந்நிலையில் அதிமுக குறித்த அவரது கடந்த ஒரு மாதகால பேச்சுகள் தற்போது வைரலாகி வருகின்றன. EPS -உடன் கூட்டணி அமைத்தால் அது தற்கொலைக்கு சமம் என்றும், EPS என்ற தீயசக்தி வரும் தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்றும் பேசியிருந்தார். இந்நிலையில் இன்று அதே அதிமுகவுடன் TTV கூட்டணி வைத்துள்ளாரே என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

News January 21, 2026

NDA-வில் இணைந்த தினகரனை வரவேற்ற EPS

image

NDA கூட்டணியில் இணைந்த TTV தினகரனை வரவேற்பதாக EPS தெரிவித்துள்ளார். திமுக கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்த இந்த கூட்டணி இணைந்துள்ளதாக கூறிய அவர், நாம் ஒன்றாக இணைந்து திமுக குடும்ப ஆட்சியின் பிடியிலிருந்து மக்களை காப்பாற்றுவோம் என பதிவிட்டுள்ளார். ஆனால் NDA கூட்டணியில் இணையும்போது TTV தினகரன் EPS பெயரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News January 21, 2026

தேர்தலுக்கு முன்பே காலியான தொகுதிகள்

image

TN-ல் தற்போது 5 சட்டமன்ற தொகுதிகள் தேர்தலுக்கு முன்பாகவே காலியாகி உள்ளன. கட்சி தாவலால், தஞ்சை ஒரத்தநாடு(வைத்திலிங்கம்), தென்காசியின் ஆலங்குளம்(மனோஜ் பாண்டியன்), ஈரோட்டின் கோபி (KAS) தொகுதிகள் காலியாகி உள்ளன. மேலும், அதிமுக வால்பாறை தொகுதி MLA அமுல் கந்தசாமியும், நாமக்கல் சேந்தமங்கலம் தொகுதி திமுக MLA-வாக இருந்த பொன்னுசாமியும் உயிரிழந்ததால் இந்த இரு தொகுதிகளும் காலியாகியுள்ளன.

error: Content is protected !!