News March 24, 2024
ஓவியங்களால் அழகான சேலம்

சேலம் குரங்கு சாவடி மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டாமல் இருக்க நெடுஞ்சாலை துறையினர் தனியர் நிறுவனங்களுடன் இணைந்து ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தடையை மீறி ஓவியம் வரைந்தால் நெடுஞ்சாலை துறை சார்பில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தை வண்ணமிகு சேலமாக மாற்றும் வகையில் ஓவியர்கள் வண்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
News October 26, 2025
கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் மூன்றாம் ஆண்டு பூஜை!

சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று, இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து, மூன்றாம் ஆண்டு துவக்க விழா நாளை திங்கட்கிழமை 27.10.2025 காலை 9 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. இந்த விழாவில் அம்மனுக்கு 108 சங்காபிஷேக பூஜை நடை பெற்று அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற உள்ளது.
News October 26, 2025
சேலம்: அம்மா உணவகத்தில் கேஸ் கசிவால் பரபரப்பு!

சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று மதியம் உணவு விற்பனை முடிந்த நிலையில் அனைத்து பணியாளர்களும் வீடு திரும்பினர். மாலை திடீரென கேஸ் கசிவு வெளியானது. தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கசிவை சரி செய்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


