News December 29, 2024

ஓவியக் கண்காட்சியை தொடங்கி வைத்த நடிகர் 

image

புதுச்சேரி, செயின்ட் தெரேசா வீதியில் வண்ண அருவி ஓவியக் கூடம் உள்ளது. இங்கு மண்ணின் மனம் எனும் தலைப்பில், ஓவியர் ஏழுமலையின் நீர்வண்ண ஓவியக் கண்காட்சி நேற்று மாலை துவங்கியது. நிகழ்ச்சியில், ஓவியர் சுந்தரம் வரவேற்றார். ஓவியக் கண்காட்சியை, நடிகர் சிவக்குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மூத்த ஓவியர் மணியம் செல்வன் முன்னிலை வகித்தார். இந்த கண்காட்சி, வரும் ஜனவரி 10ம் தேதி வரை நடக்கிறது.

Similar News

News January 1, 2025

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீசார் தடியடி

image

புதுச்சேரி கடற்கரை சாலையில் நள்ளிரவு 12:30 மணிக்கு மேல் கூடியிருந்த கூட்டத்தை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். முன்னதாக குடிபோதையில் கடற்கரைக்கு வந்த வாலிபர்களையும் போலீசார் விரட்டினர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நகர பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் தீவிரப்படுத்தி இருந்தனர்.

News December 31, 2024

அரவிந்தர் ஆசிரமத்திற்கு வந்த சிறுமி திடீர் சாவு

image

ஒடிசா மாநிலம் மகஜன்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வர். இவரது மகள் சோனாக்ஷிலெங்கா (வயது 15). மாற்றுத்திறனாளி. அரவிந்தரின் தீவிர பக்தர்களான இவர்கள் கடந்த 25-ந்தேதி புதுச்சேரி வந்து அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கி பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் சோனாக்ஷிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

News December 31, 2024

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் சிறை தண்டனை

image

புதுச்சேரி தெற்கு போக்குவரத்து எஸ்.பி. நேற்று செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 199(ஏ)- கீழ் சிறுவனின், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது, வாகனத்தின் உரிமையாளருக்கு 3 மாதம் சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். ஷேர் செய்யவும்