News February 22, 2026
ஓவர் லக்கேஜ் வண்டி திமுக: கடம்பூர் ராஜு

விஜய்யை பார்த்து பயப்படுவதால்தான் இடம் இருக்கோ இல்லையோ, எல்லாரையும் சேர்த்து திமுக ஓவர் லக்கேஜ் ஆகிவிட்டது என கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார். ஓவர் லக்கேஜ் வண்டி ஓடாது என்ற அவர், கூட்டணி என்ற பெயரில் இருக்கிற கட்சிகளை எல்லாம் இழுத்து போடுவதாகவும் கிண்டலடித்துள்ளார். மேலும், எந்த கட்சியாலும் அதிமுக வாக்கு வங்கியை பாதிக்க முடியாது எனவும் தேர்தலில் வெல்லப்போவது NDA கூட்டணிதான் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News February 27, 2026
தந்தை மீது வழக்கு தொடர்ந்த 10 வயது மகன்

சீனாவில் 10 வயது சிறுவன் தனது பரிசு பணமான ₹11 லட்சத்தை தர மறுத்த தந்தை மீது வழக்கு தொடர்ந்து பணத்தை பெற்றுள்ளான். பெற்றோர் விவாகரத்து பெற்றதால் சிறுவன் தந்தையுடன் வசித்தபோது உறவினர்கள் சந்திர புத்தாண்டு பரிசாக பணம் கொடுத்துள்ளனர். தந்தை அதை அவரது 2-வது திருமணத்துக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து தனது பணத்தை தர மறுத்த தந்தைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து சிறுவன் வெற்றி பெற்றுள்ளான்.
News February 27, 2026
ஔவையார் பொன்மொழிகள்

*ஒருவனிடத்தில் காணப்படும் நல்ல முயற்சிகளுக்கு அப்போது பயன் இல்லையாயினும் பின்னே பலன் உண்டாகும். * காரியங்களை பிறர் குறிப்பறிந்து செய்பவரே அறிவுடையவர். * ஒருவன் பிறர்மேல் பழிச்சொற்களைச் சொன்னால் அவன் எல்லோருக்கும் பகைவனாவான். *சோம்பலே தீமைக்கும் துன்பத்திற்கும் பிறப்பிடம். *எந்தச் செயலும் அதற்குரிய காலத்திலேயே செய்யப்பட வேண்டும். *வறுமை வந்தபொழுதும் சேர்ந்திருந்து துன்பம் அனுபவிப்போரே உறவினராவர்.
News February 27, 2026
விமான பயணிகளுக்கு நற்செய்தி!

விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் எந்த கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல் முழு பணத்தையும் திரும்பத் தர என்று DGCA அறிவுறுத்தியுள்ளது. இதற்கு உள்நாட்டு பயணிகள் குறைந்தது 7 நாள்களுக்கு முன் புக் செய்திருக்க வேண்டும். அதேபோல், வெளிநாட்டு பயணிகள் குறைந்தது 15 நாள்களுக்கு முன்பே புக் செய்திருக்க வேண்டும். மேலும், விமான நிறுவனங்கள் 14 நாள்களுக்கு பணத்தை வழங்க வேண்டும்.


