News December 23, 2025

ஓய்வை அறிவித்தார் CSK முன்னாள் வீரர்

image

கர்நாடகாவை சேர்ந்த இந்திய ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கெளதம், அனைத்து வகையான ஃபார்மட்களிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஞ்சி கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் மட்டுமே அதிகமாக விளையாடியுள்ள இவர், IPL-ல் CSK, MI, RR, PBKS, LSG அணிகளில் இடம்பெற்றுள்ளார். அதிலும், 2021-ல் இவரை ₹9.25 கோடிக்கு CSK வாங்கியிருந்தது. மேலும், 2021-ல் SL-க்கு எதிராக விளையாடியதே, இவர் பங்கேற்ற ஒரேயொரு ODI ஆகும்.

Similar News

News December 23, 2025

பார்வையால் ஒளி வீசும் மடோனா

image

மடோனா செபஸ்டியன், அவ்வப்போது இன்ஸ்டாவில் போட்டோக்களை பதிவிட்டு, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தற்போது அவர் பதிவிட்டுள்ள போட்டோக்களில், ஏஞ்சல் போன்று தெரிகிறார். இலையின் மீது படர்ந்த நிலவொளி போல, இவரது பார்வை மனம் முழுவதும் படர்கிறது. மனதை கொள்ளை கொள்ளும் இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தால் ஒரு லைக் போடுங்க.

News December 23, 2025

ஒரே சுக பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் ❤️❤️

image

அரிய மருத்துவ நிகழ்வாக, உ.பி.,யில் அனிதா (30) என்ற பெண்ணுக்கு ஒரே சுக பிரசவத்தில் 4 பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. 2 முதல் 3 நிமிட இடைவெளியில், அடுத்தடுத்து குழந்தைகள் பிறந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர். இருப்பினும் கணவர் மட்டும் சோகத்தில் உள்ளார். அனிதாவிற்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், தற்போது அது 7ஆக உயர்ந்து உள்ளது.

News December 23, 2025

கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்!

image

மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், எப்படியாவது மும்பை மாநகராட்சியை கைப்பற்றும் நோக்கில், உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே சகோதரர்கள் கைகோர்த்துள்ளனர். அதன்படி, சிவசேனா (உத்தவ்) 157 இடங்களிலும், ராஜ் தாக்கரேவின் நவநிர்மான் சேனா 70 இடங்களிலும் களமிறங்க உள்ளன. ஜன.15-ல் நடைபெறும் மும்பை மாநகராட்சி தேர்தலில், காங்., தனித்து போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.

error: Content is protected !!