News October 23, 2024

ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ஆட்சியர் தகவல்

image

குமரி மாவட்டத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 15 காலை 10.30 மணிக்கு ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையில் ஆட்சித்தலைவர் அலுவலக 3வது தளத்தில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின், ஓய்வூதியம் தொடர்பாக தீர்வு செய்யப்படாமல் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பிரச்சனைகள் குறித்து தீர்வு எட்டப்படும் என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

Similar News

News December 27, 2025

குமரி: ரேஷன் கார்ட் இருக்கா… கலெக்டர் முக்கிய அறிவிப்பு…

image

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார். ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க

News December 27, 2025

குமரி: ஆற்றில் குதித்த புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு!

image

முதுகுமெல் பகுதியை சேர்ந்த இவாஞ்ஜெறி (28) சட்டம் படித்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மாதம் ஆகிறது. இந்நிலையில் இவாஞ்ஜெறி டிச.24ம் தேதி குழித்துறையில் உள்ள ஒரு தனியார் மதுபான விடுதியில் மது அருந்தி கொண்டிருந்த நிலையில் போதை தலைக்கு ஏறியதால் தாமிரபரணி ஆற்றில் குதித்தார். 2 நாட்களாக தீயணைப்புத் துறையினர் தேடி வந்த நிலையில் நேற்று கமுகனூர் ஆற்றில் சடலமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை.

News December 27, 2025

குமரி: கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளத்தில் வேலை..!

image

குமரி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச.31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க..

error: Content is protected !!